பங்களாதேஷ்: ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்க தடை

டாக்கா:

ஹெட்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய பங்களாதேஷில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் சமீபத்தில் பஸ் மோதி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, சாலை வசதியை மேம்படுத்தக்கோரி தலைநகர் டாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பங்களாதேஷில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில்,‘‘ ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவாருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டூவீலர்களில் அதிகப்பட்சம் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஓட்டுவோருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்வோரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி