பாகிஸ்தானியருக்கு விசா வழங்குவது ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைப்பு: பங்களாதேஷ் நடவடிக்கை

டாக்கா:

பாகிஸ்தான் நாட்டவருக்கு ஒரு வாரத்துக்கு விசா வழங்கப்படாது என பாகிஸ்தான் நாட்டுக்கான பங்களாதேஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.


1971-ம் ஆண்டு போர்க் குற்றவாளிகளை தூக்கில் போட பங்களாதேஷ் அரசு முடிவு செய்தது.
அப்போது முதல் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுக்கு இடையேயான ராஜ்ய உறவு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பாகிஸ்தான் தூதருக்கு விசா வழங்க பங்களாதேஷ் மறுத்தது. அதன்பின் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

டாக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் தீவிரவாத செயல்களை நடத்த முயற்சிகள் நடப்பதாக பங்களாதேஷ் குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே வெளியுறவுத் துறை செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.