அமித்ஷாவின் கரையான் கமெண்டுக்கு வங்க அமைச்சர் வருத்தம்

டாக்கா

ங்க தேசத்தவரை கரையானுக்கு ஒப்பிட்டு பாஜக தலைவர் அமித்ஷா பேசியதற்கு வங்க அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் வங்க தேச மக்கள் அவர்களுடைய சுதந்திர போராட்டத்துக்குப் பின் அகதிகளாக வந்து அதன் பின் இங்கேயே தங்கி விட்டனர்.   தற்போது இந்திய குடிமக்கள் பதிவேட்டில் அவர்கள் பெயர்களை இணைக்க அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை.  இதனால் சுமார் 40 லட்சம் பேரின் விவரங்கள் இணைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கங்காபூரில் ஒரு பேரணி ஒன்றில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கலந்துக் கொண்டார்.   அந்த பேரணியில் அவர் உரையாற்றும் போது “வங்க தேச குடிமக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர்.   இது கரையான் போல நாடெங்கும் பரவ வாய்ப்புள்ளதாகும்.

இந்த கரையான்கள் நாட்டை முழுமையாக அரித்து விடும்.   அதனால் பாஜகவை மீண்டும் ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தால் அவர்களை மீண்டும் வங்க தேசத்துக்கு அனுப்பி வைப்போம்” என பேசினார்.    இது வங்க தேச மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.   இந்த உரையால் வங்க தேச தகவல்துறை அமைச்சர் ஹசானுல் ஹக் இனு தனது வருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று செய்தியாளர்களிடம், “பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வங்கதேசத்தவரை தேவை இல்லாமல் கரையானுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்.   நாங்கள் டாக்காவில் வசிப்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.   மேலும் அவர் இந்திய அரசில் எந்த பொறுப்பிலும் இல்லை.   ஆயினும் அசாமில் வசிக்கும் வங்க மொழி பேசும் சகோதரர்கள் மனம் மிகவும் புண்ப்டும் என்பதால் நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்” என கூறி உள்ளார்.