கொழும்பு

நேற்று முன் தினம் நடந்த இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் 8 வயது பேரன் கொல்லப்பட்டார்.

இலங்கையில் நேற்று முன் தினம் தேவாலயம் மற்றும் சொகுசு ஓட்டல்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் சுமார் 290க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அத்துடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடிந்துள்ளனர். காயம் அடைந்தோரில் பலர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொல்லப்பட்டோரில் பல வெளிநாட்டினரும் உள்ளனர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் ஷேக் சோனியா தனது கணவர் மாஷ்யூல் ஹக் சவுத்ரி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் இலங்கை சுற்றுலா சென்றுள்ளார். சங்ரி லா ஓடலில் குண்டு வெடிப்பு நடந்த போது அதே ஓட்டலில் ஷேக் சோனியா குடும்பத்தினர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளானர்.

அந்த குண்டு வெடிப்பில் ஷேக் சொனியாவின் கணவர் மாஷ்யூல் ஹக் சவுத்ரி காயம் அடைந்தார். ஷேக் சோனியாவின் 8 வயது மகன் ஜயான் சவுத்ரி உயிர் இழந்தார். இன்று அவரது உடல் வங்கதேசத்துக்கு எடுத்து வரப்படும் என வங்கதேச அமைச்சர் நூருல் மஜீத் மகமூத் ஹுமாயுன் தெரிவித்துள்ளார்.