டாக்கா:

200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி கால சிறைவாசிகளுக்கான உணவு முறையை பங்களாதேஷ் அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.


இது குறித்து அந்நாட்டின் சிறைத்துறை இயக்குனரக துணை தலைவர் பஜ்லூர் ரஷீத் கூறியதாவது:

எல்லா சிறைகளிலும் 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி கால உணவுகளே வழங்கப்பட்டு வந்தன.
நாட்டின் தண்டனை சட்டத்தில் சீர்திருத்தம் செய்ததையடுத்து, கடந்த 16-ம் தேதி முதல் உணவு முறையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை வழங்கப்பட்ட பிரட் மற்றும் வெல்லப்பாகு உணவு ரத்து செய்யப்படுகிறது.

நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் இருக்கும் 81 ஆயிரம் கைதிகளுக்கு புதிய உணவு வழங்கப்படும்.
பிரட்,காய்கறிகள், இனிப்பு, கிச்சடி, சாதம்   வழங்கப்படும் என்றார்.

பங்களாதேஷில் உள்ள 60 சிறைகளில் அதிக அளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் அடிக்கடி புகார் கூறிவருகின்றன.

அதேபோல், தரமான, தேவையான உணவை வழங்க வேண்டும் என சிறைக் கைதிகளும் கோரி வருகின்றனர்.

புதிய மெனுவுடன் உணவு வழங்கப்பட்டதால் கைதிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே, குறைந்த செலவில் கைதிகள் போன் செய்யும் வசதியை ஏற்படுத்தவுள்ளதாகவும் சிறைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.