டில்லி

பாகிஸ்தானின் லஷ்கர் ஈ தொய்பா ஆதரவு பெற்ற  ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் என்னும் தீவிர வாத இயக்கம் எல்லையில் முகாமிட்டு வருகிறது.

வங்க தேசத்தை சேர்ந்த தீவிரவாத இயக்கமான ஜமாத் உல் முஜாகிதீன் பங்களா தேஷ் (ஜேஎம்பி) பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கமான லஷ்கர் ஈ தொய்பா ஆதரவை பெற்றதாகும்.    இந்த இயக்கம் இந்தியாவில் உள்ள தனது ஆதரவாளர்கள் மூலம் ஆயுதங்களையும் தளவாடங்களையும் வெகு நாட்களாக வாங்கி வந்துள்ளது.

இந்த இயக்கம் ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.   இந்திய அரசால் இந்த  இயக்கம் பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜேஎம்பி இயக்கத்தினர் இந்திய எல்லைகளில் முகாமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  எல்லையில் இருந்து 10 கிமீ தூரத்தில் முகம்மிட்டுள்ள இவர்கள் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள இடங்களின் வழியாக ஊடுருவ முயன்று வருகின்றனர்.

அந்த எல்லைப்புற மக்களிடம் திருமணம் மூலம் உறவு உண்டாக்கி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று வரும் இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்திலும் ஓரி ரு இடங்களில் ஊடுருவி உள்ளனர்.   மியான்மரில் ரோகிங்கியா இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு பழி வாங்க இந்த இயக்கத்தினர்  புத்த மத தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் வருடம் புத்தகயாவில் நடந்த தாக்குதலை ஒட்டி சமீபத்தில் கைது செய்யப்பட்ட 12 தீவிரவாதிகளிடம் நடந்த விசாரணையின் போது மேலே குறிப்பிட்ட தகவலகளை தெரிவித்துள்ளனர்.   அதை ஒட்டி எல்லை பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளனர்.  புத்த மத தலங்களில் பாதுகாபு பலப்படுத்தப் பட்டுள்ளது.