வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டி….முரளி விஜய், கோஹ்லி சதம் அடித்தனர்

ஐதராபாத்:

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் முரளி விஜய், கேப்டன் கோஹ்லி ஆகியோர் சதம் அடித்தனர்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது. ஐதராபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு லோகேஷ் ராகு, முரளி விஜய் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களம இறங்கினர். இதில் லோகேஷ் ராகுல் 2 ரன் எடுத்து அவுட் ஆனார். பின் முரளி விஜய்யுடன் புஜாரா இணைந்தார். உணவு இடைவேளைக்கு பின் முரளி விஜய் அரை சதம் அடித்தார். இவரை தொடர்ந்து புஜாராவும் அரை சதம் அடித்தார்.
இந்திய அணி 178 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா 83 ரன்களுடன் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய முரளி விஜய் டெஸ்ட் போட்டியில் தனது 9வது சதத்தை அடித்தார். இவர் 108 ரன்களுடன் ஆட்டம் இழந்தார்.

கேப்டன் கோஹ்லி சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி அடிக்கும் 16வது சதமாகும். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: bangladesh test cricket murali vijai, kohli century hyderabad, கேப்டன் கோஹ்லி ஆகியோர் சதம் அடித்தனர், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் முரளி விஜய்
-=-