வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 224 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி

ங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் 224 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.  கேப்டன் ரஷித்கானின் அற்புறமான பந்து வீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றியை  பெற்றுள்ளது.

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன்களும், வங்காளதேசம் 205 ரன்களும் எடுத்தன. 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது.  4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் காரணமாக  வங்காளதேச அணிக்கு  398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் களமிறங்கிய வங்காள தேச அணியின் ஆட்டத்தினபோது பல முறை மழை குறுக்கிட்டது. அப்போது அணி 44.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அத்துடன்  4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கேப்டன் ஷகிப் அல்-ஹசனும் (39 ரன்), சவும்யா சர்காரும் (0) களத்தில் இருந்தனர். வங்காள தேச அணியின்  சுழற்பந்துவீச்சாளர்கள் ரஷித்கான் 3 விக்கெட்டுகளும், ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு 262 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இன்றைய ஆட்டத்தின்போது, ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சுருண்டது.

இதன் காரணமாக  224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான்  வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான்  11 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத் தக்கது.

கார்ட்டூன் கேலரி