வங்கதேசத்தில் இருந்து வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்களே: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசம்

காளியாகன்ச்: வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்கள், அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார்.

இது குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது: வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் இந்திய குடிமக்கள் … அவர்களுக்கு குடியுரிமை கிடைத்துள்ளது.

நீங்கள் மீண்டும் குடியுரிமை பெற விண்ணப்பிக்க தேவையில்லை. நீங்கள் தேர்தலில் வாக்களித்து, பிரதமரையும் முதல்வரையும் தேர்ந்தெடுத்து வருகிறீர்கள். இப்போது அவர்கள் சொல்கிறார்கள் நீங்கள் குடிமக்கள் அல்ல, அவர்களை நம்ப வேண்டாம்.

ஒரு நபரைக் கூட வங்கதேசத்தில் வெளியேற்ற அனுமதிக்க மாட்டேன். மாநிலத்தில் வசிக்கும் எந்தவொரு அகதியும் குடியுரிமை இழக்கப்பட மாட்டார்கள்.

இது வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். டெல்லியில் நடந்தது ஒருபோதும் இங்கு நடக்க அனுமதிக்கப்படாது. வங்கம் மற்றொரு டெல்லியாகவோ அல்லது மற்றொரு உத்தரப்பிரதேசமாகவோ மாற நாங்கள் விரும்பவில்லை என்று பேசினார்.