பெங்களூரு: 4 மாடி கட்டடம் இடிந்து 3 பேர் பலி

பெங்களூரு:

பெங்களூரு கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் பலியாயினர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் 4 மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் 15 பேர் சிக்கினர். இதில் 3 பேரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. சம்பவ இடத்தை அமைச்சர் ஜார்ஜ் நேரில் பார்வையிட்டு மீட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.