பணமதிப்பிழப்பால் பெண் மாற்றுத் திறனாளிக்கு ரூ.1.39 லட்சம் இழப்பு….உதவிக் கரம் நீட்டிய இன்ஜினியர்
பெங்களூரு:
பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட பெண் மாற்றுத்திறனாளிக்கு தி இந்து வாசகர் உதவி செய்துள்ளார்.
பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி 2016ம் ஆண்டில் வெளியிட்டார். இதனால் கர்நாடகா மாநிலம் ஹஸன் நகரை சேர்ந்த பார்வை மற்றும் செவி திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி மீனாட்சி என்பவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் ரூ.1.39 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றாமல் விட்டுவிட்டார். இதை மாற்றுவதற்காக பல இடங்களில் அலைந்தும் அதை மாற்றமுடியவில்லை. இதனால் பெறுப்படைந்த மீனாட்சி அந்த பணத்தை ஆற்றில் வீசி எறிந்தார்.
இந்த செய்தி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியானது. இதையடுத்து மீனாட்சிக்கு உதவ தி இந்து வாசகர் ராமகிருஷ்ணன் முன் வந்தார். அவருக்கு ரூ. 25 ஆயிரத்தை வங்கி கணக்கில் ராமகிருஷ்ணன் செலுத்தினார்.
மேலும், அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியரான ராமகிருஷ்ணனின் இந்த உதவிக்கு மீனாட்சியின் தாய் லட்சுமிதேவி, சகோதரர் நாகராஜ் ஆகியோர் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தனர். ராமகிருஷ்ணனை பாராட்டி தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.