அபுதாபியில் மாயமான வங்கி ஊழியர் பிணமாக மீட்பு….கேரளாவை சேர்ந்தவர்

துபாய்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாபர். 9 ஆண்டுகளாக அபுதாபியில் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் திடீரென கடந்த வாரத்தில் மாயமானார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடிவந்தனர்.

இந் நிலையில் அபுதாபி புறநகர் தொழிற்பேட்டை பகுதியான முசாஃபாவில் ஜாபர் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.