ங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது நாளை முதல் 4,500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைக்கப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
00
 
மத்தி அரசு இன்று தெரிவித்த அறிவிப்புகள்:
1. நாளை முதல் ரூ.500, 1000 நோட்டுகளுக்கு வங்கியிலிருந்து ரூ.2000 மட்டுமே மாற்றலாம்.
2.  திருமணம் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் பணம் எடுத்துக் கொள்ளலாம். மணமகன், மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் உரிய ஆவணங்களைக் காட்டி பணம் எடுத்துக் கொள்ளலாம்.
3. பயிர்க் காப்பீட்டுக்கான ப்ரீமியம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு..
4. விவசாய சந்தை வர்த்தகர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் ரூ.50,000 பணம் எடுத்துக் கொள்ளலாம்.
5. ராபி பருவ விவசாயத்துக்காக விவசாயிகள் கிசான் கடன் அட்டை பயன்படுத்தியோ அல்லது பயிர்க்கடன் மூலமாகவோ வாரத்துக்கு ரூ.25,000 பெற அனுமதி அளிக்கப்படுகிறது..
6. குரூப் சி பிரிவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய முன் பணம் பெற்றுக் கொள்ள சலுகை அளிக்கப்படுகிறது.
7. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்த வழியில் கிடைக்கும் பணத்திலிருந்து வாரத்துக்கு ரூ.25,000 பெற்றுக் கொள்ளலாம்.