வாராக் கடன்களுடன் வங்கி மோசடிகளும் அதிகரிப்பு : ரிசர்வ் வங்கி

டில்லி

ற்கனவே இந்தியாவில் வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ள நிலையில் தற்போது வங்கி மோசடிகளும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவது தெரிந்ததே.   இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.   அந்தக் குழு இது குறித்து ஆலோசனை அளிக்க முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் ரகுராம் ராஜனிடம் கருத்து கேட்டுள்ளது.    வாராக்கடன்கள் என்பது அதற்கு ஈடாக அளிக்கப்பட்ட சொத்துக்களை விற்பதன் மூலம் வசூல் செய்துக் கொள்ளலாம் என வங்கிகள் தெரிவிக்கின்றன.

அதே போல் வங்கிகளில் மோசடி செய்வதும் அதிகரித்து வருகின்றன.   மோசடி என்பது கடன் வாங்கிய தொகைக்கு குறைவான மதிப்புள்ள சொத்துக்களை ஈடாக பெறும் போது நடைபெறுகின்றன.  அது மட்டுமின்றி தவறான அல்லது போர்ஜரி செய்யப்பட்ட ஆவணங்களை அளிப்பதன் மூலமும் நடைபெறுகிறது

 

சமீபத்தில் நடந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில்  ஆபரண வியாபாரி நிரவ் மோடி செய்த மோசடி மிகவும் அதிக அளவில் நடைபெற்ற மோசடி ஆகும்.

 

ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி கடந்த 2017-18 ஆம் வருடம் வங்கி மோசடி மிகவும் அதிகரித்துள்ளது.    அதற்கு முந்தைய ஆண்டான 2016-17 ஆம் வருடம் வங்கி மோசடிக் குற்றங்கள் 4500ஆக இருந்தது.  ஆனால் 2017-18 ஆம் வருடம் அது 5835 ஆகி உள்ளது..  இது முன்பு இருந்த வருடங்களை விட மிகவும் அதிகமாகும்.

அதே போல வங்கி மோசடி செய்யப்பட்ட தொகை 2016-17ஆம் வருடம் ரூ.23000 கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில் 2017-18 ஆம் வருடம் ரூ.41000 கோடியாக அதிகரித்துள்ளது.  இந்த மோசடி குற்றங்கள் வரிசைப்ப்டி மும்பையில் அதிகமாகவும் , கொல்கத்தாவின் சிறிது குறைந்தும் மற்றும் டில்லியில் மேலும் குறைந்தும்  நடந்துள்ளன.   இந்த மூன்று நகரங்களுடன் ஒப்பிடுகையில் மற்ற நகரங்களில் குறைவான குற்றங்கள் நடந்துள்ளன.