நிதி மோசடி: அமீரக மருத்துவமனை அதிகாரி இந்தியாவுக்கு வந்தே பாரத் மிஷன் விமானத்தில் தப்பி ஓட்டம்

புதாபி

ந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இயங்கிய விமானத்தில் நிதி மோசடி செய்த அமீரக மருத்துவமனை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் வந்தே பாரத் மிஷன் விமானத்தில் இந்தியாவுக்குத் தப்பி உள்ளார்.

இந்திய அரசு கடந்த 7 ஆம் தேதி அன்று வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டத்தைத் தொடங்கியது.  இதில் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை இந்திய அரசு ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வருகிறது  இந்த திட்டத்தின் கீழ் இந்தியா வர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.  இவர்களில் அவசரப் பணி உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதற்குத் தற்காலிக உடல்நிலை கோளாறு, பணி இன்மை, மகப்பேறு, மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக செல்ல விரும்புவோர் தகுந்த அத்தாட்சியை அளிக்க வேண்டும்.   இந்நிலையில் இந்த வந்தே குறிப்பணி விமானத்தில் பண மோசடி குற்றச்சாட்டில் உள்ள எம் என் சி மருத்துவக் குழும நிதி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, இரட்டை மகன்கள், மூத்த மகன், வீட்டில் பணிபுரியும் பெண் ஆகியோருடன் இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எம்  என் சி குழுமம் வங்கிக் கடன் வாங்கி விட்டு மோசடி செய்துள்ளதாகவும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் தராமல் ஏமாற்றியதாகவும் பல புகார்கள் உள்ளன.   இந்த குழுவின் நிர்வாக அமைப்பைக் கலைத்த நீதிமன்றம் தற்போது மருத்துவமனைகள் இயங்க மட்டும் அனுமதி அளித்துள்ளது.   இந்த குழுமத்தின் அனைத்து அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த 7 ஆம் தேதி அன்று குடும்பத்தினருடன் வந்தே பாரத் மிஷன் விமானத்தில் கொச்சி சென்றுள்ளார்.  அவருக்கு இருக்கை எண் 16 பி ஒதுக்கப்பட்டு அவருடைய குடும்பத்தினருக்குப் பக்கத்து இருக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன.   ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்குப் பயணம் செய்ய அனுமதி கிடைத்தது பற்றிப்  பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.    கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டதாக அவர் பொய் சான்றிதழ் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணமூர்த்தியின் தாய் 2018 ஆம் வருடம் இறந்து விட்டார்.   கிருஷ்ணமூர்த்தியின் தந்தைக்குப் புற்று நோய் உள்ள போதிலும் அவர் உடல்நிலை சீராக உள்ளது.   எனவே அவர் தனது தந்தை உடல் நிலை சரியில்லை என பொய் சான்றிதழ் அளித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   ஏற்கனவே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியா வரக் காத்திருக்கையில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.