புதுடெல்லி:

கடந்த 2018-19-ம் ஆண்டு வரை வங்கி மோசடி  ரூ. 71 ஆயிரத்து 500 கோடியை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ. 41 ஆயிரத்து 167 கோடி அளவுக்கு வங்கி மோசடி நடந்தது. இது தொடபாக 5,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2018-19-ம் ஆண்டில் ரூ.71 ஆயிரத்து 542 கோடி அளவுக்கு வங்கி மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக 6,801 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டைவிட வங்கி மோசடி 73% அதிகரித்துள்ளது.

ஜுவல்லரி, உற்பத்தித்துறை, விவசாயம், ஊடகம்,விமான சேவை, சேவை மற்றும் திட்டம், காசோலை, வர்த்தகம், தகவல் தொழில்நுப்டம், ஏற்றுமதி வர்த்தகம், வைப்பு நிதி, கடன் ஆகிய துறைகளில் வங்கி மோசடி அதிகம் நடக்கிறது.

பெரிய அளவிலான வங்கி மோசடிகளை சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.