டெல்லி:

வங்கிகளில் உள்ள லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடு போனால் அதற்கு வங்கிகள் பொறுப்பாக முடியாது என்று ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.

வக்கீல் குஷ் கல்ரா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி, 19 பொதுத்துறை வங்கிகள் அளித்த பதிலில், ‘‘வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் லாக்கர் தொடர்பாக உள்ள உறவு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என்ற அடிப்படையில் உள்ளது. வங்கி லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்களுக்கு உரிமையாளரே பொறுப்பு.

இன்னும் சில வங்கிகள், லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்களை, வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த விருப்பம் மற்றும் முயற்சி ஆகியவற்றின் கீழ் வைக்கிறீர்கள் என கையெழுத்து வாங்கப்படும். லாக்கர்களில் வாடகைக்கு எடுக்கப்படும் போது அதில் வைக்கப்படும் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றிற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பாகாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘ போர், உள்நாட்டு பிரச்னை, திருட்டு, கொள்ளை போன்ற சூழ்நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தான் வைக்க வேண்டும் என்பது அனைத்து வங்கிகளிலும் உள்ள பொதுவான நடைமுறை’’ என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.