வங்கி கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது! : எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி

download

ஒசாகா:

ங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜப்பானில் இருந்து முதலீடுகளை கவர்வதற்காக அந்த நாட்டுக்கு ஆறு நாட்கள்  அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஒசாகா நகரில்  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு  பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,  ” பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் சிறப்பாக லாபத்துடன் இயங்குகின்றன.  வங்கிகளை அரசு பலப்படுத்தும்.  வங்கிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துதரும்.

வாராக்கடன்கள் எல்லாமே வங்கி மோசடிகள் அல்ல. சில கடன்கள் சரியற்றவையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

கடந்த ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.12 ஆயிரம் கோடியை செயல்முறை வடிவிலான லாபமாக சம்பாதித்துள்ளது. ஆனால் அது வாராக்கடன்கள் காரணமாக நஷ்டம் காட்டி இருக்கிறது. இந்த வாராக்கடன்கள் எல்லாம் இப்போது தந்தது அல்ல. முந்தைய காலத்தில் அளித்த கடன்கள் அவை. துறைகள் நலிவுற்று இருந்தபோது கொடுத்த கடன்கள். . அந்த பிரச்னைகள் உரிய  விதத்தில் சரி செய்யப்பட்டுள்ளன.

வங்கிகளுக்கு பெருமளவில் முதலீட்டு ஆதரவினை வழங்குவோம். அதே நேரத்தில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாதவர்கள், வங்கிகளை கவலைப்பட வைத்து விட்டு, அவர்கள் நிம்மதியாக தூங்கவிட முடியாது” என்று கூறி ஜெட்லி தெரிவித்தார்.