Random image

பேங்க் ஆப் பரோடா, விஜயா மற்றும் தேனா வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு

நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வலுவான பொருளாதாரத்தை எதிர்கொள்ளும் வகையில் வங்கிகளை ஒருங்கிணைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்து வருகிறது.

bank

பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் சுமை காரணமாக நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக பலப் பொதுத்துறை வங்கிகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளை இணைத்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வங்கிகளை இணைக்கும் முடிவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எடுத்துள்ளனர். உலகில் வளர்ந்து வரும் பொருலாதாரத்தை எதிர்க்கொள்ளும் வகையில் வங்கிகளை ஒருங்கிணைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொதுத்துறை வங்கிகளை இணைத்தால், அது நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக உருவாகும் என நிதிச்சேவை துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, கட்டுக்கடங்காத பெட்ரோல், டீசல் விலை உயர்வு என இந்திய பொருளாதாரம் பல சிக்கல்களை எதிர் நோக்கியுள்ள நிலையில் வங்கிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.