சென்னை:

ங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையிலும் ஒரு தரப்பினர் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், வங்கி சேவை பெருமளவில் பாதிக்கப்படவில்லை.

மத்திய அரசின், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் சீரமைப்பு தொடர்பான  நடவடிக்கைகள்  கைவிட வேண்டும், வாராக் கடனை தீவிரமாக வசூலிப்பதோடு, கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதக் கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சம்மேளனம் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன.

அதையடுத்து மத்திய அரசு தலைமை தொழிலாளர் நல ஆணையர், இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வங்கி ஊழியர்களின் கோரிக்கை சம்பந்தமக, மத்திய நிதியமைச்சக அதிகாரிகள், தொழிலாளர் நல ஆணையம், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில், வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்தியஅரசு மறுத்து விட்டதால், கூட்டம்  தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 22/10/2019 அன்று (இன்று) ஒருநாள் அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இன்றைய போராட்டத்தில், தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் உள்பட அகில இந்திய அளவில் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பதால், பல மாநிலங்களில் வங்கி சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக்கோரி, அகில இந்திய அளவில் இன்று(அக்.,22) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் உட்பட, இந்திய அளவில் 3 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல தனியார் வங்கிகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் மட்டுமே ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.