டில்லி, 

நாடு முழுவதும் நாளை திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக  வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து டெல்லியில் கடந்த 19ம் தேதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால், 22ந்தேதி (நாளை)   திட்டமிட்டப்படி நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகை யில், ‘ தேசிய வங்கி துறைகளுக்கு எதிராக சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு அதை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.

இதற்கு எதிராக பலமுறை குரல் கொடுத்தும் இதுவரை அரசுடன் எந்த உடன்பாடும் எட்டப்பட வில்லை.

அதனால் இந்த நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நாட்டில் உள்ள ஒன்பது முக்கிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கள் ஒன்றுகூடி நாளை அகில இந்திய அளவில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தோம்.

அதன்படி நாளை  போராட்டம் நடைபெறுகிறது’. என்று கூறினார்.

வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளான,  பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, உலக போட்டியில் எங்களை இணைத்து செயல்படக்கூடாது. வங்கி கிளைகளை மூடுவதற்கு முயற்சிக்க கூடாது. சாதாரண மக்களுக்கும் உதவக்கூடிய வங்கி சேவைகளை வழங்க வேண்டும், கிராமப்புற வங்கி கிளைகளை அதிகளவில் தொடங்க வேண்டும் மற்றும் குறைவான வட்டிகளில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துறை ஆகியவைகளுக்கு கடன் வழங்க முன்வர வேண்டும் போந்ற  கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.

இதற்கு அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நாளை நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

சுமார் 10 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.