டில்லி

ன்று முதல் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவும் எடுக்கவும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வங்கிகளில் அளிக்கப்படும் பல சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.   ஆனால் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவும் பணம் எடுக்கவும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.  சமீபத்தில் வங்கி விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதனால் இன்று அதாவது நவம்பர் 1 முதல் வங்கிகளில் பணம் செலுத்த மற்றும் பணம் எடுக்கக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.  இந்த விதியை முதலில் பாங்க் ஆஃப் பரோடா தொடங்கி உள்ளது.  விரைவில் இந்த விதிகள் பாங்க் ஆஃப் இந்திய, செண்டிரல் பாங்க், ஆக்சிஸ் பாங்க் உள்ளிட்ட வங்கிகளில் அமல்படுத்தலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

பாங்க் ஆஃப் பரோடாவில் இன்று முதல் கரண்ட் அக்கவுண்ட், மற்றும் சேமிப்பு அக்கவுண்ட் ஆகியவற்றுக்கு வேறு வேறு விகிதங்களில் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இனி மூன்று முறைக்கு மேல் பணம் செலுத்தும் அல்ல்து எடுக்கும் ஒவ்வொரு முறையும்  கரண்ட் அக்கவுண்டுக்கு ரூ.150 மற்றும் சேமிப்பு அக்கவுண்டுக்கு ரூ.40 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இதைத் தவிர ரொக்க கடன் வரம்பு, நடப்பு கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்கு வைத்திருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்வதற்கான வசதியைப் பெறுவார்கள். ஆனால் இதை விட அதிக பணம் டெபாசிட் செய்ய வங்கிகள் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கும்.