டில்லி:

இந்தியாவில் வங்கி திவால் நடைமுறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் பிரச்னையில் சிக்கியுள்ள 21 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சொத்துக்களில் முதலீடு செய்ய பிளாக்ஸ்டோன் குரூப் எல்பி முதல் ஓக்ட்ரி கேப்பிட்டல் குரூப் எல்எல்பி போன்ற சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்து நிற்கின்றன.

ஆனால், இந்த வழக்குகளை கையாளும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாகுறை காரணமாக ஆயிரகணக்கான திவால் வழக்குகளின் விசாரணை மந்தமடைந்துள்ளது. 2 ஆயிரத்து 500 திவால் வழக்குகுளை 26 நீதிபதிகள் கொண்ட 10 அமர்வுகள் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆனால், 5 ஆண்டுகளுக்கு 80 அமர்வுகள் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு மதிப்பீடு செய்திருந்தனர். கடந்த பிப்ரவரியில் திவால் சட்டத்தில் மேலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை வெளியில் கொண்டு செல்லும் வங்கி மோசடிகளுக்கு எதிராக திவால் நடைமுறையின் பிடியை இறுக்க பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். அதனால் நீதிபதிகள் பற்றாகுறையை முதலில் தீர்க்க வேண்டும். இல்லை என்றால் வரிசை கட்டி நிற்கும் உலகளாவிய முதலீட்டாளர்கள் இரும்பு முதல் சிமென்ட் வரையிலான தொழிற்சாலையை அபகரிக்க நேரடியாக பேரம் பேச தொடங்குவதை தவிர்க்கமுடியாது.