வங்கிகள், அஞ்சலகங்கள் பழைய நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் மாற்ற கெடு

டில்லி

ங்கிகள், அஞ்சலகங்கள் பழைய நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் இன்னும் ஒரு மாதம்வரை மாற்றலாம் என அரசு அறிவித்துள்ளது

கடந்த வருடம் டிசமபர் 8 ஆம் தேதி ரூ. 500 மற்றும் ரூ 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்தது தெரிந்ததே.  அதைத் தொடர்ந்து மக்கள் வங்கிகள் அஞ்சலகங்களில் பழைய நோட்டுக்களை கொடுத்து டிசம்பர் 30 வரை மாற்றினார்கள்.

இப்படி மாற்றப்பட்டு வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் உள்ள பழைய நோட்டுக்களை ரிசர்வ் வங்கிகளில் இன்னும் ஒரு மாதம் வரை மாற்றலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளுக்கும் செல்லும் எனவும் தெரிகிறது.