அபராதம் மற்றும் கட்டணம் மூலம் ரூ. 50000 கோடியை விழுங்கிய வங்கிகள்

டில்லி

ங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் மற்றும் கட்டணமாக ரூ.50000 கோடி வசூல் செய்துள்ளது.

பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் பலவற்றில் ஒவ்வொரு கணக்கிலும் குறைந்த பட்ச தொகை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.    அவ்வாறு குறைந்த பட்ச தொகையில் சிறிதளவு குறைந்தாலும் அதற்காக வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.    அது மட்டுமின்றி ஏடிஎம் இயந்திரங்கள் எத்தனை முறை பயன்படுத்தலாம் என கட்டுப்பாடு உள்ளன.  அதைத் தாண்டினால் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

பெரும்பாலான நேரங்களில் ஏடிஎம் இயந்திரம் நமது செயல்கள அனைத்தும் முடிந்த பிறகே பணம் கையிருப்பு இல்லை என்பதை தெரிவிக்கின்றன.   ஆனால் அதுவும் ஏடிஎம் உபயோக எண்ணிக்கையாக கணக்கிடப் படுகின்றன.    அது மட்டுமின்றி குறைந்த பட்ச தொகையை கணக்கில் வைத்திருக்க முடியாதவர்கள் ஏழை மக்கள் ஆவார்கள்.

இவ்வாறு வங்கி தனது ஏடிஎம் பணம் தராவிட்டாலும் கட்டணம் வசூலிக்கிறது.   அது  போல பல வாராக்கடன்களை கண்டு கொள்ளாமல் அடிமட்டத்தில் உள்ளவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கிறது.    இவ்வாறு பொதுதுறை வங்கிகளில் மட்டும் ரூ.10000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.    இதைத் தவிர தனியார் வங்கிகளில் இதைப் போல் பல மடங்கு வசூலிக்கப்பட்டிருக்கலாம் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பொதுதுறை வங்கிகளில் வசூலிக்கப்பட்ட அபராதம் மற்றும் கட்டணங்கள் மொத்தம் ரூ. 50000 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.   இது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வட்டியில் 60% என ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.    அத்துடன் வங்கிகள் அனைத்தும் வணிக ரீதியாக செயல்படுவதால் அவர்களிடம் இருந்து சேவையை தற்போது எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறி உள்ளார்.