கேரளா வெள்ளம்….கடன், கட்டண வசூலில் வங்கிகள் சலுகை அறிவிப்பு

திருவனந்தபுரம்;

கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் கேரளா பாதித்துள்ளது. புணரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்கள் விநியோகமும் நீடித்து வருகிறது. இந்நிலையில் இயற்கை சீற்றத்தில் பாதித்தவர்களுக்கு வங்கிகள் சில சலுகைகளை அறிவித்துள்ளது.

கேரளா வங்கிகளின் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனரா வங்கி செயல் இய க்குனரும், மாநில வங்கிகள் குழு தலைவருமான பாரதி கூறுகையில், ‘‘ கல்வி கடன்கள் 6 மாதத்துக்கும், அனைத்து இதர கடன்களும் ஒரு ஆண் டுக்கு தள்ளி வைக்கப்பட்டள்ளது. இந்த கடன் தொகையை 5 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.அதோடு வெள்ளத்தில் சேமடைநத் செக் புத்தகங்களுக்கு மாற்று புத்தகங்கள் கட்டணமின்றி வழங்கப்படும். சேவை வரி ரத்து செய்யப்படும்.

இதேபோல், டெபிட் கார்டு, செக் புத்தகங்கள் வழங்க கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. அக்டோபர் 31ம் தேதி வரை இச்சலுகைகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக உள்ளது. ஒவ்வொரு வங்கியிலும் பேரிடர் மீட்பு மையம் உள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘கேரளா வெள்ளத்தில் 323 வங்கி கிளைகளும், 423 ஏடிஎம் மையங்களும் மூழ்கியது. இதில் 162 கிளைகள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டது. பத்தனமிட்டாவில் 67, ஆழப்புழாவில் 33, எர்னாகுளத்தில் 29, திரிச்சூரில் 19 கிளைகளும் இன்னும் செயல்பட தொடங்கவில்லை. 82 ஏடிஎம்.கள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டது.

வங்கிகள் முழு அளவில் செயல்பட தொடங்கிவிட்டபோதும், கம்ப்யூட்டர் இன்னும் சீரடையவில்லை. சில வங்கிகளின் லாக்கர்கள் நீரில் மூழ்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் அவற்றை திறந்து பார்க்கும் போது தான அதில் சேதமடைந்த பொருட்கள் குறித்த விபரம் தெரிய வரும். கடன் வசூலிக்கும் பணிகள் 3 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

You may have missed