டில்லி:

2016-17ம் நிதியாண்டில் மோசடி மூலம் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர் சிவபிரதாப் சுக்லா எழுத்துப்பூர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதில், ‘‘ வங்கிகளுக்கு 2016&17ம் நிதியாண்டில் மோசடி மூலம் ரூ.16 ஆயிரத்து 789 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள் அளித்துள்ள மோசடி கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2016&17ம் நிதியாண்டில் நாடு முழுவதும் பரவலாக வங்கிகளில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி மூலம் ரூ.65.30 கோடி பறிபோயுள்ளது.

ரூ. 18.48 கோடி மதிப்பில் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக 393 வழக்குகள் முதல் அரையாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி கிளைகள், ஏடிஎம்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வபோது ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுரையை வழங்கி வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.