டில்லி:

பணமதிப்பிழப்பை எதிர்கொள்ள வங்கிகளுக்கு கூடுதலாக அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று எஸ்பிஐ முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ.யில் முதல் தலைவராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற அரு ந்ததி பட்டாச்சார்யா இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது

அவர் கூறுகையில், ‘‘பணமதிப்பிழப்பை எதிர்கொள்ள வங்கிகளுக்கு இன்னும் அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு வங்கிகள் கூடுதலாக அவகாசம் வழங்கி வங்கிகள் தயாராகி இருந்திருந்தால் இதன் முடிவு இன்னும் சிறந்த வகையில் அமைந்திருக்கும். முன் கூட்டியே தயாராகி இருந்திருந்தால் எங்களிடம் பரபரப்பு குறைவாக இருந்திருக்கும்.

பணத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல விதிமுறைகள் உள்ளது. இதற்கு காவல் துறை உதவி தேவைப்படும். கான்வாய் ஏற்பாடு செய்ய வேண்டும். கொண்டு செல்லும் வழித்தடத்தை முடிவு செய்ய வேண்டும். இது கவனமாக கையாள வேண்டிய நடைமுறையாகும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ பணமதிப்பிழப்பு சரியோ தவறோ ஆனால் இதை செயல்பதுத்த அவகாசம் அளித்திருக்க வேண்டும். பணமதிப்பிழப்பு மூலம் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 40 சதவீதம் உயர் ந்துள்ளது. அதிக மதிப்புடைய பணத்தின் மீது குறைந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்குதல் சிறந்த நடவடிக்கையாகும். கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது.

லட்சகணக்கான வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும் என்றால் வங்கிகளுக்கு மூலதனம் அளிக்க வேண்டும். சமீபத்தில் ரூ.2.1 டிரில்லியன் மூலம் வழங்கியது வரவேற்கத்தக்கது. எனது பதவி காலத்தில் கடன் கொடுக்க வலியுறுத்தி எந்த அரசியல்வாதியும் ஒரு போன் கூட செய்தது கிடையாது. வங்கி நடைமுறையில் தனிநபர் எவ்வித முடிவும் எடுத்துவிட முடியாது. குழு மூலம் தான் முடிவு எடுக்க முடியும்’’ என்றார்.