சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஆய்வு நடத்த தடை: தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை:

த்திய கல்வி வாரியம் அனுமதி பெற்று இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதை தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக புற்றீசல் போல சிபிஎஸ்இ பள்ளிகள் தோன்றி வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யும் வகையில் தமிழக அரசு மார்ச் 2ந்தேதி  அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ நிர்வாகங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்தது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஆய்வு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை  அடுத்த வாரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.