பேனர்கள் விவகாரம்: அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதி மன்றம் கடும் எச்சரிக்கை

சென்னை:

ட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள், வேலையை ராஜினாமா செய்துவிட்டு  கட்சிகளில் சேர்ந்து பணி யாற்றலாம் என்று சென்னை  உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.

தமிழகத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. ஆனால், அதை மதிக்காமல் ஆளும் கட்சியினர் உள்பட அனைத்து தரப்பினரும் சாலை ஓரங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பல முறை எச்சரிக்கை விடுத்த உயர் நீதி மனற்ம்,  சட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்தது.

ஆனால், தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  விதிமீறல் பேனர்கள் தொடர்பான வழக்கில் மாநகராட்சி தரப்பு அறிக்கையில் அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சில இடங்களில் பேனர் வைத்தவர்களே அகற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், மாநகராட்சியின் அறிக்கை மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,  விதி மீறல் பேனர்களை தடுக்க பல உத்தரவுகளை போட்டாலும், முழுமையாக நிறை வேற்ற முடியவில்லை என்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக அரசு தெரிவிக்கும் காரணங்களைக் கேட்டு சோர்வடைந்து விட்டதாகத் தெரிவித்த நீதிபதிகள், ஒரு பொருளை திருடியவர் திருப்பிக் கொடுத்து விட்டால் வழக்கு பதிவு செய்ய மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கள், சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள், வேலையை ராஜினாமா செய்துவிட்டு  கட்சிகளில் சேர்ந்து பணியாற்றலாம் என்று கடுமையாக எச்சரித்தனர்.

இதுகுறித்து  விரிவான விளக்கத்தை நாளை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.