சென்னை,

யிருடன் இருப்பவர்கள் படத்துடன் பேனர் வைக்க சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி வைத்தியநாதன் அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தார்.

இது அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பாக, மற்றொரு வழக்கில் பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கை விடுத்தது. ஆனால், ஐகோர்ட்டு பெஞ்சு அதை மறுத்து தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

இந்நிலையில், பேனர், கட் அவுட் வைக்க விதிக்கப்பட்ட தடை வழக்கில்  சென்னை மாநகராட்சி சார்பாக மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,   மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் அன்றை தினம்  திருச்சியில் விதிமீறி பேனர் வைக்கப்பட்ட வழக்குடன் இணைத்து மாநகராட்சியின் மேல்முறையீடு மனு குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.