Random image

கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும்….வெங்கைய நாயுடு

டில்லி:

கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ராஜ்யசபா கண்ணியத்தையும், கவுரவத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதுதான் எனது முன்னுரிமை பணி. தவறு செய்யும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்கான குழு தனது முதல்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இறுதி அறிக்கை அடுத்த மாத இறுதியில் தாக்கலாகிறது. கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில் உட்பிரிவுகளை சேர்க்க வேண்டும். கட்சியை விட்டு விலகினால் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவியை தானாகவே இழக்க நேரிடும் வகையில் விதிமுறைகளை சேர்க்க வேண்டும். இதை சிலர் தார்மீக அடிப்படையில் செய்வார்கள், சிலர் செய்ய மறுத்துவிடுவார்கள். இதை அரசியல் சட்ட கடமையாக ஆக்க வேண்டும்’’ என்றார்.