பார் கவுன்சில் தேர்தல்…..25ல் வாக்கு எண்ணிக்கை

சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் 25-ம் தேதி எண்ணப்படுகிறது.

இது குறித்து பார்கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,‘‘மார்ச்சில் தமிழநாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

வரும் 25-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் ஓட்டுக்கள் எண்ணப்படும். 302 பெட்டிகளில் உள்ள ஓட்டுக்கள் உயர்நீதிமன்றத்தில் உள்ள வக்கீல்கள் கூடுதல் கட்டடத்தில் எண்ணப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.