கேரள வெள்ளம் : வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ரூ. 50 லட்சம் நிவாரண நிதி

திருவனந்தபுரம்

கேரள மாநில வெள்ளத்தால் பாதிக்கபட்ட  வழக்கறிஞர்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியை இந்திய பார் கவுன்சில் வழங்குகிறது.

கேரளாவில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுளது.    லட்சக்கணக்கானோர் தங்கள் விடு மற்றும் உடமைகளை இழந்து ஆதரவற்று உள்ளனர்.  இவர்களுக்கு நிவாரண நிதியும் நிவாரணப் பொருட்களும் நாடெங்கிலும் இருந்து வந்துக் கொண்டு உள்ளன.   மழை வெகுவாக குறைந்துள்ளதால் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.

இந்த வெள்ளத்தினால் வழக்கறிஞர்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர்.  அவர்களுடைய அலுவலகங்களில் வெள்ள புகுந்ததால் சட்டப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அழிந்து விட்டன.   இவ்வாறு துயருறும் வழக்கறிஞர்களுக்கு உதவ இந்திய பார் கவுன்சில் முன் வந்துள்ளது.

இது குறித்து இந்திய பார் கவுன்சில் உறுப்பினரும் முன்னாள் நிர்வாக தலைவருமான டி எஸ் அஜித், “கேரள வெள்ளத்தினால் வழக்கறிஞர்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.  இந்த வழக்கறிஞர்களுக்கு இந்திய பார் கவுன்சில் ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது.    இந்த நிவாரண தொகை மூலம் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் பயன் அடைவார்கள் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.