ஓய்வுபெற்ற பின் அரசு பதவிகள் எதையும் ஏற்க கூடாது…..தீபக் மிஸ்ராவுக்கு பார் கவுன்சில் வலியுறுத்தல்

டில்லி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுக்கு பிறகு அரசு பதவிகள் எதையும் ஏற்க கூடாது என்று இந்திய பார் கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் கேரளா கவர்னராக நியமிக்கபட்டார். இவரை தொடர்ந்து மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வுபெற்ற பின்னர் அரசு பதவிகள் எதையும் ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் 2ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் பார் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்படடுள்ளது. அதில்,‘‘ஓய்வுபெறும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் வழியை பின்பற்ற வேண்டும். ஓய்வுக்கு பின்னர் அவர் எவ்வித அரசுப் பதவிகளையும் ஏற்க கூடாது. அவ்வாறு செய்தால் ஜனநாயகத்துக்கும், நீதித்துறைக்கும் அவர் செய்த மிகப்பெரிய சேவையாக அது இருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டள்ளது.