சென்னை:

மிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பார் கவுன்சில் தலைவராக  வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜூம், துணைத் தலைவராக வழக்கறிஞர் வி.கார்த்திக்கேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 25 பேரை தேர்வு செய்வ தற்கான, தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 198 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்குகள்  முடிவுக்கு வந்ததையடுத்து, தேர்தல் அதிகாரியான பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் பார்வையாளராக, உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சி.காண்ட்பால் பங்கேற்றார்.

தேர்தல் முடிவடைந்ததும், வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தலில் போட்டியிட்ட,  வழக்கறிஞர்கள்,  பி.எஸ்.அமல்ராஜ், ஆர்.சி.பால்கனகராஜ், எஸ்.பிரபாகரன், ஆர்.விடுதலை, கே.பாலு, ஜி.மோகன கிருஷ்ணன், வி.கார்த்திக்கேயன், எம்.வேல் முருகன், டி.செல்வம், ஆர்.சிவசுப்பிரமணியன் உள்பட  25 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து,  பார் கவுன்சில் தலைவர் பதவிக்கு பி.எஸ்.அமல் ராஜூம், ஆர்.சி.பால்கனகராஜூம் போட்டி யிட்டனர்.  இதில் பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி பெற்றார். இதேபோல துணைத் தலைவர் பதவிக்கு வி.கார்த்திக்கேயன், எம்.வேல்முருகன், ஆர்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் வி.கார்த்திக்கேயன் வெற்றி பெற்றார்.  மேலும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு எஸ்.பிரபாகரனும், டி.செல்வமும் போட்டி யிட்ட நிலையில், எஸ்.பிரபாகரன் வெற்றி பெற்று மீண்டும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொடர்பான விவரங்கள்  அகில இந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும்,  அங்கிருந்து முறைப்படி அறிவிப்பு வந்தபிறகு அரசிதழில் வெளியிடப்பட்டு அதன்பிறகு புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள் பார் கவுன்சில் நிர்வாகிகளாக பொறுப்பேற்பார்கள் என்று  தேர்தல் அதிகாரியான சி.ராஜகுமார் கூறினார்.