ஹூஸ்டன்:

மெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச் டபிள்யு புஷ்ஷின்  மனைவி பார்பரா புஷ் உடல்நலமில்லாமல் இருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு 92. அவரது உடலுக்கு அமெரிக்கர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் தாயார். பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இவர் நீண்டகாலம் வாழ்ந்த அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெறுகிறார். பார்பராவின் மகன் ஜார்ஜ் புஷ் 2000ம் ஆண்டு அமெரிக்காவின் 43ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இருமுறை அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புஷ், எனது அன்பு அம்மா தனது 92வது வயதில் காலமானார்.  நாங்கள் துக்கத்தில் இருக்கிறோம், ஆனால்  அவர் கடைசி காலம் வரை அவர் எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். பார்பரா புஷ்ஷை தாயாக பெற்ற நான் அதிர்ஷ்டசாலி; எனது குடும்பம் அவரை இழந்து வாடுகிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி” என ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.

பார்பரா புஷ், அமெரிக்காவின் முன்னாள் அதிபரின் மனைவி, மற்றொரு அதிபரின் தாயார் என்ற பெருமை கொண்ட ஒரே ஒரு பெண்மணியாவார். அவரது மறைவுக்கு டொனால்டு டிரம்ப், கிளின்டன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு காரணமாக மரணம்  அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.