மும்பை

டி ஆர் பி யை உயர்த்தி காட்டிய விவகாரம் குறித்து ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

பார்வையாளர்கள் எண்ணிக்கையை போலியாக அதிகரித்து டி ஆர் பி யை உயர்த்திக் காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட சில சேனல்கள் மீது மும்பை காவல்துறை குற்றம் சாட்டியது. இந்த குறிப்பிட்ட சேனல்க்ளை மட்டும் அதிக நேரம் பார்க்கப் பணம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும் விசாரணை நடப்பதாகவும் காவல்துறை செய்துள்ளது.   இந்த விவகாரம் குறித்து காவல்துறை 6 பேரைக் கைது செய்துள்ளது.

இந்நிலையில் டி ஆர் பி ரேட்டிங்கை அதிகமாகக் காட்டி இந்த சேனல்கள் தங்களுக்கு அதிக அளவில் விளம்பரம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த விவகாரம் குறித்து நாடெங்கும் கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.  பார்லே போன்ற நிறுவனங்கள் இத்தகைய சேனல்களுக்கு விளம்பரம் அளிக்கப்போவதில்லை எனத் தடை விதித்துள்ளது.   இந்நிலையில் ரிபப்ளிக் டிவிக்கு எதிர்ப்பு மேலும் வளர்ந்து வருகிறது.

ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வுக் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிபப்ளிக் டிவிக்கு நாங்கள் அனுப்பிய இ  மெயிலில் இந்த சேனல் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளதாக அறிவித்ததால்  நாங்கள் மிகவும்  அதிருப்தி அடைந்துள்ளோம்.  நாங்கள் இந்த விசாரணை குறித்து எவ்வித கருத்தும் வெளியிடவில்லை என்பதே உண்மையாகும்.

உண்மையில் ரிபப்ளிக் டிவி தனியார் ஒளிபரப்பைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகக் குழு கண்டனம் தெரிவித்தது. மேலும் விசாரணைக்கு எவ்வித உதவிகளோ ஆவணங்களோ தேவைப்பட்டால் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளோம்.  எனவே ரிபப்ளிக் டிவி எங்கள் இ மெயிஒல் குறித்து தவறாகத் தகவல் வெளியிட்டுள்ளதைக் கண்டிக்கிறோம்” என அறிவித்துள்ளது.