உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜோயல் ஸ்குமாச்சர் கேன்சரால் உயிரிழந்தார்….!

1995-ம் ஆண்டு வெளியான பேட்மேன் பார்எவர் (Batman Forever) மற்றும் பேட்மேன் அண்ட் ராபின் (Batman & Robin) போன்ற படங்களை இயக்கியவர். 90-களில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஜோயல் ஸ்குமாச்சர்.

கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 80.

பல இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு அளித்த பெருமை இவரை சேரும். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.