ஜெர்மன் கோப்பை – 20வது முறையாக வென்றது பேயர்ன் முனிக் அணி!

--

பெர்லின்: உள்ளூர் கிளப் அணிகள் பங்குபெற்ற ஜெர்மன் கோப்பை கால்பந்து தொடரில், ‍பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

‍ஜெர்மனியில் நடைபெற்று வந்த இத்தொடரில், இறுதிப்போட்டியில் பேயர்ன் முனிக் – பேயர் லெவர்குசன் அணிகள் மோதின. இப்போட்டியைக் காண, மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இப்போட்டியில் பேயர்ன் முனிக் அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அந்த அணி 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று, 20வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

முதன்முறையாக கடந்த 1957ம் ஆண்டு அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணி, சமீபத்தில்தான் ‘பண்டெஸ்லிகா’ கோப்பையை வென்றிருந்தது.

பேயர்ன் முனிக் அணி, ஒரே ஆண்டில் பண்டெஸ்லிகா மற்றும் ஜெர்மன் கோப்பை ஆகிய இரண்டையும் வெல்வது இது 13வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.