Random image

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக வாஷிம் ஜாபர் நியமனம்

டாக்கா:

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாபர் பங்களாதோஷ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


41 வயதான வாஷிம் ஜாபர், இந்தியாவுக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

தொடக்க ஆட்டக்காரரான வாஷிம் ஜாபர் 40 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் திறமையை பார்த்து, பங்களாதேஷ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

ஓராண்டில் 6 மாதங்கள் அவர் பங்களாதேஷில் தங்கியிருந்து வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்.