பிசிசிஐ வங்கி கணக்கு முடக்கமா? லோதா கமிட்டி விளக்கம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) வங்கிக் கணக்கை முடக்கும்படி லோதா கமிட்டி வங்கிகளுக்கு பரிந்துரை செய்ததாகவும் அதை ஏற்று பிசிசிஐ-யின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதனால் நடப்பு நியூசிலாந்து தொடரை ரத்து செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதில் முழு உண்மை இல்லை என்று லோதா கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.

lotha

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி லோதா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வங்கி கணக்கை முழுமையாக முடக்க உத்தரவிடவில்லை என்றும் வங்கி மூலம் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கூடுதல் நிதி தரக்கூடாது என பிசிசிஐ கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, அன்றாட வங்கி நடவடிக்கைகள், கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்டவைகள் அத்தியாவசியமானவை. இதிலெல்லாம் லோதா கமிட்டி தலையிடாது என்றும் நீதிபதி லோதா விளக்கம் அளித்துள்ளார்.