இந்திய அணி மீண்டும் 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர்கள் பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளன.

india

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3டி20, 4 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அதன்பின் தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரை இந்திய அணி 2-1 என வென்று வரலாறு படைத்தது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 12ம் தேதி முதல் 18 ம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. இத்தொடருக்குப் பின் ஜனவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை நியூசிலாந்தில் நடக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. இத்தொடரின் அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 போட்டிகள் இரவு 7 மணிக்கும் ஒருநாள் போட்டிகள் பகல் 1.30 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. \

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயண அட்டவணையில், முதல் டி20 போட்டி பிப்.24ம் தேதி பெங்க்ளூருவிலும், 2வது டி20 பிப்.27ம் தேதி விசாகப்பட்டினத்திலும், முதல் ஒருநாள் போட்டி மார்ச் 2ம் தேதி ஹைதர்பாத்திலும், 2வது ஒருநாள் போட்டி மார்ச் 5ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி மார்ச் 8ம் தேதி ராஞ்சிலும், 4வது ஒருநாள் போட்டி மார்ச் 10ம் தேதி மொகாலியிலும், மார்ச் 13ம் தேதி 5வது ஒருநாள் போட்டி டெல்லியிலும் நடைபெற உள்ளது.