வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனிதாபிமானம் – பிசிசிஐ பாராட்டு!

அலகாபாத்: தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, நீர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார் இந்திய அணியின் வேகப் புயல் முகமது ஷமி.

உத்திரப்பிரதேசத்தில் சஹாஸ்பூர் என்ற இடத்தில் வசித்து வருகிறார் ஷமி. அங்கு தேசிய நெடுஞ்சாலையில், அம்ரோகா என்ற இடத்தில் ஒரு டென்ட் அமைத்து, பேருந்தில் பயணம் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் முகக் கவசம் ஆகியவற்றை வழங்கி வருகிறார் முகமது ஷமி.

தவிரவும், தனது சஹாஸ்பூரில், தனது வீட்டின் அருகில் உணவு விநியோகம் செய்யும் மையம் ஒன்றையும் அமைத்துள்ளார் ஷமி.

அவரின் இந்த செயலை பிசிசிஐ பாராட்டியுள்ளது. “நாடே கொரோனாவை ஒழிப்பதற்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், முகமது ஷமி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார். நாங்கள் உங்கள் அனைவருடனும் இணைந்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது பிசிசிஐ.