பசுமை கிரிக்கெட்….ஐ.நா.வுடன் பிசிசிஐ ஒப்பந்தம்

மும்பை:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐநா சுற்றுசூழல் அமைப்புக்கும் இடையே பசுமை கிரிக்கெட் ஒப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளது.

மும்பையில் இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டிக்கு நடுவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் பிசிசிஐ செயலாளர் (பொறுப்பு) அமிதாப் சவுத்ரி, ஐநா சுற்றுசூழல் செயல் இயக்குனர் எரிக் சோல்ஹெய்ம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

‘‘இதன் மூலம் சுற்றுசூழல் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாட்டில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாற்று மற்றும் நிலையான தீர்வுகளை முன்னிலைப்படுத்தப்படும். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் பசுமை செயலாப்டை வலியுறுத்தும் வகையிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்லப்படும்.

கிரிக்கெட் போட்டியின் போது கழிவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பசுமை கிரிக்கெட்டை உருவாக்கப்படும்’’ என்று சவுத்ரி தெரிவித்துள்ளார்.