டில்லி

லகக் கோப்பை அணி வீரரகளுக்கான சீருடையில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு அவரை கவுரவிக்கும் வகையில் முதல் எண் கொண்ட சீருடை ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த புல்வாமா தாக்குதலை ஒட்டி இந்திய விமானப்படை பதில் தாக்குதலை நிகழ்த்தியது. பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதால் அவர்களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டி அடித்தனர். அப்போது இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகி அதை செலுத்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ரானுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார்.

சர்வதேச அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அபிநந்தனை விடுதலை செய்தது. நேற்று அவர் வாகா எல்லையில் கொண்டு வந்து விடப்பட்டார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் எல்லையில் காத்திருந்தனர். அவருக்கு வரவேற்பு தெரிவித்து அனைத்து அரசியல் தலைவரகளும் திரைப்பட மற்றும் விளையாட்டு பிரபலங்களும் டிவிட்ட்ரில் வாழ்த்து மழை பொழிகின்றனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அபிநந்தனுக்கு பாராட்டு தெரிவிக்கும் தனது டிவிட்டர் பதிவில், “நாம் அபிநந்தனை வரவேற்கிறோம். நீ வானையும், எங்கள் மனங்களையும் ஆள்கிறாய். உனது துணிச்சலும் மரியாதையும் வளரும் தலைமுறைக்கு உதாரணமாக அமையும்” என வாழ்த்தி உள்ளது.

நேற்று உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கான சீருடை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீருடை வெளிர் நீலம் மற்றும் கரு நீல வணங்களில் அமைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் பெயரும் ஒரு எண்ணும் ஆடையில் குறிப்பிடபட்டிருக்கும்.

அபிநந்தனுக்கு ஒன்றாம் எண் சீருடை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சீருடையில் விங் கமாண்டர் அபிநந்தன் என அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.