மும்பை,

மும்பையில் உள்ள  கிரிக்கெட் தலைமை அலுவலகமான பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. இது கிரிக்கெட் ஆர்வலர்களிடடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பிசிசிஐ-ல் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும்  உச்சநீதிமன்றம் அதிரடி நடிவடிக்கையில் இறங்கியது.

2015ம் ஆண்டில் இந்த விளையாட்டு நிறுவனத்தில் உள்ள ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை எதிர்கொள்வதற்காக நீதிமன்றம் இந்த குழுவை உருவாக்கியது. பி.சி.சி.ஐ. நிர்வாகத்தை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தேர்தல் மூலம் புதிய தலைமையை அமைத்து, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது தான் நிர்வாக குழுவின் பணி என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

அதேபோல் லோதா குழு பரிந்துரைகளை மாநில கிரிக்கெட் சங்கங்களிலும் அமல்படுத்தி தேவையான  சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் நிர்வாக குழுவுக்கு ஒதுக்கப்பட்ட பணி. பி.சி.சி.ஐ.யில் சில முடிவெடுக்கும் அதிகாரங்கள் மாநில கிரிக்கெட் சங்கங்கள் வசம் உள்ளது.

இந்நிலையில், மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 15 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பிசிசிஐயில் கடந்த 4ந்தேதி காலை 11 மணியளவில்  ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீண்டும், ஜனவரி 5 ந்தேதி பகல் 2.30 மணி அளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போதய ஆய்வு 15 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை  பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ராகுல் ஜோஹரி மற்றும் தலைமை நிதி அதிகாரி (சி.என்.ஓ.) சந்தோஷ் ரங்கெக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.