சிட்னி டெஸ்ட் – இந்திய அணியைப் பாராட்டிய செளரவ் கங்குலி!

கொல்கத்தா: சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரை வெல்வதற்கான நேரமிது! என்று பாராட்டியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

இந்திய அணியினர் தோற்றுவிடுவார்கள் என்று பலரால் கணிக்கப்பட்ட ஒரு போட்டியை சிறப்பாக கையாண்டு, டிரா செய்துள்ளனர் இந்திய அணியினர். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, ஓய்வில் இருக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளதாவது, “புஜாரா, அஸ்வின் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோரின் தேவையை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம் என்று நம்புகிறேன்.

வலுவான பந்துவீச்சு படைக்கு எதிராக, மூன்றாம் நிலையில் பேட்டிங் செய்வது என்பது எளிதானதல்ல. இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இது டெஸ்ட் தொடரை வெல்வதற்கான நேரம்” என்றுள்ளார் கங்குலி.