இந்திய ராணுவ சின்னத்தை கையுறையில் அணிந்த தோனியின் தேசப்பற்று தொடருமா? 

வுதாம்ப்டன்

ந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் கையுறையில் இந்திய ராணுவத்தின் பாரசூட் படை பிரிவு சின்னத்தை பொறுத்தி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது..

இந்திய கிரிக்கெட் வீரரான தோனிக்கு தேசப்பற்று மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.   அவர் இந்திய ராணுவத்தின் பாரசூட் பிரிவில் கவுரவ அதிகாரி பதவி வகித்து வருகிறார்.   அத்துடன் அவர் இந்த பிரிவில் பல பயிற்சி வகுப்புகளிலும் கலந்துக் கொண்டுள்ளார்.

நேற்று முன் தினம் சவுதாம்ப்டனில் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின் போது அவர் இரு உலக சாதனைகளை நிகழ்த்தினார்.    உலகின் அதிக முறை விக்கட் கீப்பராக இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்.   அது மட்டுமின்றி உலகக் கோப்பை போட்டிகளில் அதிகம் வீரர்களை அவுட் செய்த பந்து வீச்சாளர்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

இவை எல்லாவற்றையும் விட அவர் தனது கை உறையில் இந்திய ராணுவத்தின் பாரசூட் பிரிவு சின்னத்தை வரைந்து பயன்படுத்தி உள்ளார்.   இது பலருடைய கவனத்தை கவர்ந்துள்ளது.   அவரது கைகள் க்ளோஸ் அப்பில் காட்டப்படும் போது இந்த சின்னம் தெளிவாக தெரிந்ததால் இந்திய ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தோனியை இந்த சின்னத்தை கை உறையில் இருந்து அகற்றுமாறு கூறி உள்ளது.   இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பிய செய்தியில் வாரிய சட்டப்படி எந்த ஒரு வீரரும் தனிப்பட்ட செய்தியை அளிக்கும்படி எதையும் அணியக்கூடாது என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது தனிப்பட்ட செய்தி எதையும் அளிக்கவில்லை எனவும் இது வணிகம் அல்லது சமயம் தொடர்பான சின்னம் இல்லை என்பதையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    அத்துடன் தோனி தனது  கை உறையில் இந்த சின்னத்தை அணிவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: army parachute regiment, Dhoni's glouse, requested icc approval, world cup 2019
-=-