இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்கவில்லை!! பிசிசிஐ மறுப்பு

--

டில்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அணில் கும்ப்ளே சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்த பதவிக்கு முன்னார் வீரர்கள் ரவிசாஸ்திரி, வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியானது. இந்த செய்தி அனைத்து தொலைக்காட்சி செய்தி சேனல்கள், இணையதளம், சமூக வளை தளங்களில் வைரலாக பரவியது.

ஆனால், ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed